7ம் அறிவு திரைவிமர்சனம்

பகுத்தறிவு எனும் 6ம் அறிவைக் கொண்டவன் என்று மார்பு தட்டிக்கொள்ளும் மனிதன் உணர்வின் வசப்பட்டு வாழும் மிருகங்களைவிடக் கேவலமாக கொலைக்காகவே கொலைசெய்யும் கொடுவிலங்காக, மனிதனையே மனிதன் அடிமைகொள்ளும் ஆதிக்கவாதிகளாக, பெண்களைப் பண்புடன் நடத்தமுடியாத பண்பாளராக, தாம்கற்ற வித்தையை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து அவர்களையும் வாழவைக்க விரும்பாத, பணத்திலேயே படுத்துறங்க விரும்பும் மானிடர்களாக வாழமுயலும் உலகில் 7ம் அறிவைத் தேடமுயன்றிருக்கிறது இந்தப்படம். இந்த 7ம் அறிவுதான் எது? ஆழ்மனதில் அடங்கிக்கிடக்கும் ஆத்ம ஞானமா? மெய்ஞானமா? விஞ்ஞானமா? எது எப்படியோ திரைப்படங்கள் காட்டுவது விண்ணாணம் தானே. இதை மெய்ஞானத்தைக் காட்டும் ஒரு விண்ணாணப்படம் எனலாமோ 7ம் அறிவு.
கருவற்ற கதைகளை வைத்து காலங்காலமாகக் காதல், காதல் எனத் திரைப்படங்களை எடுத்து காலத்தைக் கழிக்கும் காலத்தில், நல்ல வளமான உண்மை வரலாற்றுக் கதையுடன் ஆரம்பித்து, இலங்கைத் தமிழர்களையும் ஊறுகாய்போல் தொட்டுச் சென்று எதிர்காலக் கற்பனையிலும் யதார்த்தங்களை ஜீரணித்தும் படமாக முடிகிறது. உணவு எப்படி இருந்தாலும் ஊறுகாய் நாவில் சுண்டும்போது உணவின் சுவையூறு மறைக்கப்படும் என்பதை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தொழில்நுட்பங்கள் மிகச்சிரத்தை எடுக்கப்பட்டுள்ளன என்பதற்கு காட்சியமைப்பும், கோணங்களும், ஒலி, ஒளித்தெளிவும் சான்றாகிறது. சண்டைக்காட்சிகள் பல யதார்த்தமற்று இருந்தாலும் காட்சிக்கு நன்றாகவே இருக்கிறது. காரணம் ஒரு சாதாரண மனிதனுடைய வாழ்க்கையை வைத்துப் பின்னப்பட்ட திரைப்படமல்ல இந்த 7ம் அறிவு.
நான் அன்று தேசம்நெட்டில் எழுதிய தமிழ்பௌத்தர்கள் என்ற வரலாற்று மையக்கருவை சாட்சி கூறும் வகையாக படம் ஆரம்பிக்கிறது. அதாவது ஈழத்தமிழர்கள் தான் இலங்கையின் முதல் பௌத்தர்கள் என்றும், பலதமிழர்கள் தமிழகத்தில் பௌத்தமத்தையும் தழுவி இருந்தார்கள் என்றும், அதன் பாதிப்பு ஈழத்திலும் இருந்தது என்றும், உலகின் கிழக்கே பௌத்தம் பரவுவதற்கு தமிழர்களே (திராவிடர்களே) காரணமாக இருந்தார்கள் என்றும் அதை இன்றும் திராவிடப்பௌத்தம் என்றும் கிழக்கத்தையோர் அழைப்பர் என்றும் எழுதியிருந்தேன். இப்படியான ஒரு தமிழ் பௌத்தஞானிதான் போதிதர்மன். இவர் கௌதம புத்தருக்குச் சமனான பெறுமதியுடன் வாழ்ந்தார். இவருடைய வரலாற்றை அறிந்து அதைக்கருவாக்கிப் பின்னப்பட்டதே 7ம் அறிவு.
இந்தப் படத்தின்படி போதிதர்மன் என்பவர் இற்றைக்கு 1600 வருடங்கள் அதாவது 5ம் 6ம் நூற்றாண்டில் காஞ்சியில் பிறந்ததமிழன் என்றும், கேரளப்பகுதியின் இன்றும் பலமாகவிருக்கம் கலகாரி என்று தற்காப்புக்கலையைக் கற்றவர் என்றும், மூலிகை மருத்துவத்தில் வல்லமையுடைய ஒருதமிழ்பிச்சு என்றும் திரைப்படம் தொடர்கிறது. ஆனால் சர்ச்சையாளர்கள் அவர் மலையாளி என்றும், தமிழ் பல்லவ மன்னன் என்றும் வரலாறுகளை, புராணங்களைப் புரட்டிப் போடுகிறார்கள். இந்தப் போதிதர்மன் மலையாளியாகவே இருக்கட்டுமே அங்கே முதன்மொழியாகவும் மூத்தமொழியாகவும் இருந்தது தமிழ்தானே. இவர் மலையாளப்பகுதியை பிறப்பிடமாகக் கொண்டாலும் தமிழன் என்பது சந்தேகத்துக்கிடமில்லாததே. எது எப்படியாயினும் இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஒரு திராவிடனோ, தமிழனோ சீனாநோக்கிச் சென்று, புத்தருக்கு நிகரான ஒருவாழ்க்கையை வாழ்ந்து, ஒரு திறமையான, வல்லமையான சமூகத்தை உருவாக்கி இன்றும் வணங்கும் தெய்வமாக இருக்கிறார் என்ற உண்மையை திரைப்படம் எடுத்துக்கூறுவது எம்மை எமக்கே சுட்டிக்காட்டுவது போல் அமைகிறது.
பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கும், மித்துக்களில் இருந்து மீழ்வதற்கும் புத்தனின் வழிகாட்டல் சாம்பிராட் அசோகனின் சங்கங்களூடாக பௌத்தம் தெற்குநோக்கி வந்தது. பௌத்தத்தின் படையெடுப்பால் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டனர் என்பதை முன்பு தேசத்தில் எழுதியிருந்தேன். இதன்பின் சமயகுரவர்களின் விடாமுயற்சியாலும், அனல்வாதம், புனல்வாதம் போன்ற வெற்றிகளாலும் பௌத்தம் இந்திய மண்ணிலிருந்தே விரட்டப்பட்டு, சமணம் மண்கவ்வ இந்துமதம் மீண்டும் தளைத்தோங்கியது என்பது வரலாறு.
போதிதர்மன் என்பதில் போதி என்ற சொற்பதம் எதைச்சுட்டி நிற்கிறது. போதிமரம் எனும் அரசமரத்தின் கீழ்தான் சித்தார்த்தன் எனும் நேபாளிய இந்து இளவரசன் ஞானம் பெற்றுக் கௌதமபுத்தன் ஆனான். இதனாலேதான் பௌத்தத்துடன் அரசமரம் தொடர்பு படுத்தப்படுகிறது. ஆனால் அரசமரம் நிற்கும் இடமெங்கும் பௌத்தம் வளர்த்திருந்தது என்பது தப்பானதும் முழுமையற்ற முட்டாள்தனமான விவாதமும் ஆகும். படத்திலும் போதிதர்மனாக வேடமேற்ற சூர்யா தியானம் செய்வதும், பயிற்சி எடுப்பதும் ஒரு அரசமரத்தின் கீழ்தான்.
அடுத்து போதி என்பது போதித்தல் படிப்பித்தல் கற்பித்தல் என்பதாகும். இதையோ தர்மனும் செய்ததால் போதிதர்மன் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது கற்பித்த தர்மம் என்றும் கருதலாம். போதிதர்மன் ஒருதமிழர் என்றும் அறியப்பட்டாலும் அவரைப் பிராமணன் என்றும், தமிழ்பல்லவன் என்றும், காஞ்சியைச் சேர்ந்தவர் என்றும் சிலர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும் பலவாகக் கதைகள் திரிக்கப்பட்டுத் திரிகின்றன.
தற்காப்புக்கலை, ஆயுள்வேத மூலிகை வைத்தியத்திறமை, இறையறிவு, தன்சக்தியால் மற்றவர்களின் புத்தியை மாற்றிச் செயற்படுத்தும் மனோவசியத்திறன் கொண்ட போதிதர்மன் சீனாவை அடைந்தபோது அக்கிராம மக்கள் கொடுமையான இறப்பைக் கொடுக்கும் அம்மை போன்ற நோய் பரவி இறந்து கொண்டிருந்தனர். போதிதர்மன் வந்த சகுனம்தான் இதற்குக் காரணம் என்றும் நம்பி அவரை எதிர்க்கவும், கொல்லவும் முயன்று தோற்றுப் போயினர். நோயினால் பாதிக்கப்பட்டு சாவுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட சீனச்சிறுமியை தன்மூலிகை வைத்தியத்தால் குணப்படுத்தி அக்கிராம மக்களின் இரட்சகரானார் போதிதர்மன். போதிதர்மனின் காவி ஆடைக்குள் இருந்து நோயிலிருந்து விடுபட்டு, நலமடைந்து போதி தர்மனின் காவி உடைக்குள் இருந்து தாயிடம் பறந்து செல்லும் சீனச்சிறுமியின் அழகு மனங்களைக் கொள்ளையடித்து விடுகிறது. அந்தக்காட்சி அமைப்போ ஒருதனிதான்.
தென்னகத் தற்காப்புக்கலையான கலகாரியின் தேர்ச்சி பெற்ற தர்மன், தன் போரிடும் திறமையினால் தனிமனிதனாக நின்று போரிடுவதும், தன்சக்தியால் மணல் குப்பைகளை சூறாவளியாக்கி எதிரிகளை விரட்டுவதும், எதிரியின் புத்தியை பேதலிக்கச் செய்து தன்கண்ணின் மயக்கும் சக்தியால் எதிரிகளை மாற்றி தம்மைத்தாமே எதிர்க்கும் நுட்பத்தைக் கண்ட சீனமக்கள் போதிதர்மனைக் குருவாக ஏற்று வாழத் தொடங்கினார்கள். தனக்குத் தெரிந்த கலைகளை தன்மாணாக்கர்களுக்கு கற்பித்து விட்டு தன் இறுதிக்காலத்தை தன்னூர் காஞ்சியில் கழிக்கவெனப் புறப்படும் வேளை அக்கிராமமக்கள் மீண்டும் தவறு செய்ய விளைந்தனர். போதிதர்மன் தம்மண்ணை விட்டுப்போவதால் அதிஸ்டமும், கற்றுத்தந்த கலைகளும் தம்சீனத்தை விட்டுப்போய்விடும் என்றும், அன்னியர்கள் அக்கலைகளைக் கற்றுக் கொள்வார்கள் என்று கருதியதால் தர்மனுக்கு உணவில் நஞ்சுவைத்துக் கொடுத்தனர். அதில் நஞ்சு உண்டு என்று கண்டும், அதை ஏற்று உண்டு அங்கேயே சமாதியாகிறார் போதிதர்மன். அவருக்குக் கோவில் அமைத்துக் கொண்டாடினார்கள் அத்தேசத்தவர்கள். சான் (Chan) எனச் சீனமொழியிலும் ஸ்ச்சான் (zan) என யப்பானிய மொழியிலும் அழைக்கப்படும் புத்தவிகாரை இன்றும் சீனாவில் உள்ளது. இது ஒரு தமிழ்பௌத்தனின் சமாதி என்ற இந்தியனுடைய வரலாறு இந்தியர்களுக்குத் தெரியாதபோதும் சீனர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது என்பதை திரைப்படம் தொட்டுக்காட்டியது. இது 1600 வருடங்களுக்கு முன்நிகழ்ந்த உண்மைக்கதை.
போதிதர்மனின் வாழ்க்கையை வியந்து அதில் நாட்டம் கொண்ட சுபா எனும் மாணவி, தர்மனின் வம்சாவளியில் வந்த சேர்க்கஸ்சில் வேலைசெய்யும் இளைஞனை காதலிப்பதுபோல் நடித்து அவனை ஆய்வுக்கு உட்படுத்த முயல்கிறாள். அதாவது ஒருமனிதனிலுள்ள நிறமூர்த்தங்களை தூண்டுவதனூடாக அவன் பரம்பரையில் இருந்த திறமைகளை இவனுள் வரவைக்கலாம் என்பதை 1600 வருடங்களுக்கு முன் போதிதர்மன் எழுதியிருந்தார். இவை வெறும் ஏடுகளாகவும், கண்காட்சிப் பொருட்களாகவுமே உள்ளன. இதையே இன்று விஞ்ஞானம் என்று அமெரிக்கா தமது நிறமூர்த்த (மரபணு) ஆய்வுகள் என்று கூறுகின்றது. சுபா தன் ஆய்வுகளை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தபோது அதை மறுத்துரைத்து, ஆங்கிலத்தில் பேசுமாறு நகைத்துரைத்தனர் பேராசியர்கள். தமிழா? ஆங்கிலம் தெரியாதா என்று நக்கலும் அடித்தனர். ”500 வருடங்களுக்குள் வந்த ஆங்கிலத்திற்கு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும் 20000 வருடங்களுக்கு எமது மண்ணில் வளர்ந்திருந்த தமிழ்மொழிக்குக் கொடுக்க மறுக்கிறீர்களே” என்று கூறும் வேலை சினிமாகொட்டகை ஆரவாரத்தால் அதிர்ந்தது. எவர் முதன்மைப் பேராசிரியராக நின்று, சுபா முழுமையாக நம்பும் போதிதர்மனின் தத்துவ ஆய்வுகளை எதிர்த்தாரோ அவரே அதை சீனாவுக்கு விற்று ஒப்பரேசன் றெட் என்று கோடிக்கணக்கில் பணம் பண்ணி இந்தியமண்ணுக்கு நாசம் விளைவிக்க விளைந்தார்.
சுபாவின் ஆய்வு இந்தியாவில் போதிதர்மன்களை உருவாக்கி விடும் என்று அச்சமுற்ற சீன அதிகாரிகள் தர்மனால் பயிற்றுவிக்கப்பட்ட கலைகளை கற்றுத் தேர்ந்த ஒரு சீன இளைஞனான யொனியை சுபாவையும், போதிதர்மனின் வழித்தோன்றலான சேர்க்கஸ் இளைஞனையும் கொல்வதற்கு இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். அத்துடன் போதிதர்மன் சீனாவுக்கு வந்தபோது இருந்த கொடியதொற்று வியாதியை இந்தியாவில் பரப்புவதற்காக அந்த நோய்கிருமியை ஊசிமூலம் ஒரு நாய்க்குப் போட்டு இந்தியா முழுவதும் பரப்புவதால் இந்தியாவை அடிபணியச் செய்வதுடன், மருந்து வியாபாரத்தில் கொள்ளை இலாபம் ஈட்டலாம் என்று சீனா கருதியது. இது உலகின் பொதுச்சட்டத்தில் தடைசெய்யப்பட்ட உயிரியல் போர். இதை நடைமுறைப்படுத்த முயன்றபோது ஏற்படும் தடங்கள், தடைகள் தான் படத்தின் இறுதிப்பக்கங்கள் ஆகும்.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சீன இளைஞன் போதிதர்மனின் மனம்மயக்கும் கலையினால் எதிர்த்தவர்களைக் கண்ணாலே சாய்த்து வந்தான். ஆனால் அவனின் பாச்சா சேர்க்கஸ் இளைஞனில் பலிக்கவில்லை. காரணம் போதிதர்வனின் வழித்தோன்றலே அவன். இந்த சீனனை பொலிசும், மக்களும், எதிர்த்துநிற்க முடியாதுபோக, சுபாவும், ஆய்வுக்குழுவும் சேர்கஸ் இளைஞனும் ஓடி ஒழிந்தே மறைவிடங்களில் ஆய்வுகளைச் செய்தனர். இந்தச் சீன இளைஞனை எதிர்க்கமுடியாது, சீனம் பரப்பிய தொற்று நோய்க்கு மருந்தின்றி நாடே கலங்கி நின்றபோது போதிதர்மனை சேர்க்கஸ் இளைஞனுக்குள் வரவைப்பதனூடாக மாத்திரமே இந்தச் சீனனை அழிக்கவும், நோயில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்றுணர்ந்த சுபாவும், ஆய்வுக்குழுவும் மறைவிடமொன்றில் அந்த சேர்க்கஸ் இளைஞனை பாரிய வேதனைதரும் நிறமூர்த்த தூண்டலுக்கு உட்படுத்தி போதிதர்மனை வரவைத்து சீனனான யொனியை அழிக்கின்றனர். இதில் விறுவிறுப்பானது என்னவெனில் மற்றவர்களின் மனத்தை புத்தியை தன்வசப்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற்ற சீனன் சுபாவின் குழுவினரையே மனோவசியம் செய்து ஆய்வுகூடத்தைக் கண்டறிந்து அழிக்க முயல்கிறான். அரைகுறை ஆய்வில் மயக்க நிலையில் இருந்த சேர்க்கஸ் இளைஞன் உயிர்பிழைத்து போதிதர்மனாகிறார். சண்டைக்காட்சிகள் பல சீனப்படங்களின் பறந்தடிகாட்சிகளாக உள்ளன. படம் சடுதியாக முடிந்துவிட்டது என்ற பிரமை மனதில் தோன்றி மறைந்தது.
போதிதர்மனாகவும், சேர்க்கஸ் இளைஞனாகவும் நடிக்கும் சூர்யா பற்றிச் சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் கடுமையான உழைப்பு நடிப்பில் தெரிகிறது. குங்பூ கலையை குறுகிய காலத்துக்குள் படத்துக்குத் தேவையானவற்றை மட்டும் கற்று நடித்துள்ளார். படத்தில் குங்பூ வகுப்பு எடுப்பது போல் காட்டினாலும். சண்டைக்காட்சிகளில் சரியான குங்பூ அசைவுகளையோ சண்டைக் காட்சிகளையோ காணமுடியவில்லை. சண்டைக் காட்சிகள் கராட்டி முறையிலேயே காட்சியாக்கப்பட்டுள்ளன. இந்தப் பாத்திரத்தில் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்குள் சூர்யாவைத் தவிர வேறு எவருமே நடித்திருக்க முடியாது.
சுபாவாக நடிக்கும் கமலகாசனின் மகளான சுருதி தனது பாத்திரத்தை ஆர்ப்பாட்டமின்றிச் செய்துள்ளார். இயற்கையான நடிப்பும் ஒரு அழகிய பொம்மை போன்ற அவரின் உருவமும் கமலின் மகள் என்று பிரமைகாட்டி பார்ப்பவர்களை வசியப்படுத்தினாலும் தந்தையின் மகள் எனும் இடத்துக்கு இவர் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. சுருதி பேசும் தமிழில் இயக்குனர்கள் கவனம் எடுத்திருக்கலாம்.
திரைப்படமானது கதைசொல்வதுபோல் ஆரம்பித்து அறிவுரை கூறி முடிகிறது. தேசியத்தையும், உணர்வுகளையும் தொட்டுச் செல்லும் விதம் மக்களைக் கவர்ந்தாலும் உண்மை என்று நம்பிப் படத்தினுள் வாழ்ந்த எம்மை இந்த பிரசாரநொடி வெளியே கொண்டுவந்து விடுகிறது. எமது பண்டைய வீரம், தற்காப்பு, மருத்துவம், கலை, கலாச்சாரங்கள் எல்லாம் அன்னியர்களால் சிதைக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் எமக்கு அவர்களுடையதாக பணத்துக்குத் தருவிக்கப்படும் அவலநிலையையும், எமது விழுமியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதையும், எமது கலாச்சாரத்தில் பின்பற்றப்படுவன அனைத்தும் விஞ்ஞானரீதியானது என்பதையும் இறுதியில் சொல்லி முடிக்கும் போது தேடுதல் ஒன்று தேவை என்ற எண்ணம் மனதில் விதைக்கப்படுகிறது.
இது படம் என்பதற்கு அப்பால் சென்று வரலாற்று உண்மைகளையும் விஞ்ஞானம் எமது நாடுகளில் மூடநம்பிக்கை வடிவில் இருக்கிறது. அந்த எமது மூடநம்பிக்கைகளை வேறுவடிவத்தில் விஞ்ஞானம் என்று மேற்குலகம் கொடுத்தவுடன் அது மேற்கிலிருந்து வந்ததாக எம்மவர் பெருமை கொள்வதும், தம்மைத் தாமே சிறுமைப்படுத்துவதும், நாம் எம்மிடம் இருந்த விட்டுப்போன, திருடப்பட்ட, அறிவியலை, நுட்பங்களை, உண்மைகளை தெரிந்திருக்கவில்லை, அதற்கு சரியான காரணம் கற்பிக்கவில்லை என்ற யதார்த்த உண்மைகளை இத்திரைப்படம் மனக்கண் முன் நிறுத்துகிறது. இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்படவேண்டும் என்பதும், இதனால் நாம் மறந்துபோன அன்னியர்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தெரிந்து கொள்வதும், எதிர்காலச்சந்ததி பெருமையுடன் தன்னம்பிக்கையுடன் வலுப்பேற்று உலகத்திற்கே வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்பதை ஐயமின்றிச் சொல்லி முடிக்கிறது இத்திரைப்படம்.
சுருங்கக் கூறின் இன்று விஞ்ஞானம், கண்டுபிடிப்புக்கள் என்று காட்டப்படுவன அன்று எமது மூதாதையர் வாழ்ந்து அனுபவித்து எமக்கு கலாச்சாரவடிவில் விட்டுச் சென்றவை, மூடநம்பிக்கைகள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை வெறும் மூடநம்பிக்கைகள் அல்ல. விளக்கம் தரப்படாது வாழ்ந்து, அனுபவித்த எமது பரம்பரையின் வாழ்க்கை. அதற்கான விஞ்ஞான விளக்கங்களையும், அன்னியரால் எமக்கு விஞ்ஞானம் என்ற பெயரில் கொடுக்கப்படுவன எமது மூதாதயரின் கண்டுபிடிப்புக்கள் என்பதையும், தமிழர்கள் எப்படி எல்லாமே பெருமையுடன் வாழ்ந்தார்கள் என்பதை அறிவதும், அவற்றை எமது பிள்ளைகளுக்கு எடுத்துரைத்துப் பெருமைசார் குடிமகனாக வளர்த்தெடுப்பது அவசியம் என்ற செய்தியை மனங்களில் பதிவுசெய்து அனுப்பியது இந்தத் திரைப்படமான 7ம் அறிவு.
இப்படியான படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டுமானால் எமது ஒத்துழைப்பு அவசியம். இந்தப்படத்தை திருட்டு வீடியோக்களில் பார்க்காமல் தியேட்டருக்குச் சென்று பார்த்து உங்களது பங்களிப்பைச் கொடுப்பதுதான் நாம் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கும் சமிஞ்ஞையாகும். நல்ல நடிப்புக்கும், நடிகர்களுக்கும், கடுமையான உழைப்புக்குக் கொடுக்கும் பரிசுமாகும்.
7ம் அறிவைத்தேடும்
நோர்வே நக்கீரா
Nackeeraa பதிப்பித்தது. 





ஊரெல்லாம் உழுது


கிறிஸ் மடீனா என்ற இளைஞன் யூலி என்ற இளம்பெண்ணைக்காதலித்தான். இவர்கள் 8வருடங்கள் காதலராக இருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்வது என்ற தீர்மானித்து மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் பதிவுத்திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றும் போது இன்னும் இரண்டு வருடத்தில் நாம் திருமணம் செய்வோம் என்று உறுதி எடுத்தனர். திருமணத்துக்கு 2மாதம் இருக்கையில் திருமணத்துக்கான சத்தியத்தையும் அதற்கான வார்த்தைகளையும் அவன் எழுதும் வேலை அவனது காதலியான யூலி ஒரு விபத்திற்குள்ளாகி கோமா நிலையை அடைந்தாள். வைத்தியர்களின் செய்திப்படி அவள் வாழமாட்டாள் என்பது உறுதினானது. இருந்தாலும் இந்த இளைஞன் நம்பிக்கை இழக்காது ஒருவருடத்துக்கு மேல் அவளுக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறான். அந்த வார்த்தைகளின் வல்லமை அவளை மீண்டும் இந்த உலகிற்குத் திருப்பக் கொண்டுவந்தது. இருந்தாலும் முழுமையான முடமாக பேசமுடியாதவளாக உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவாளாக இருந்தபோதும் தன்காதலி தனக்குக் கிடைத்த ஒரு தேவதை என்றே அவளை பாதுகாத்துப் பராமரித்து வரும் இந்த இளைஞன் முன்னால் கண்ணீர்கள் கருத்தற்றுப் போயின. அவன் ஒரு போட்டியில் பாடியபோது தன் கதையைச் சொன்னான் அதையும் இங்கே தருகிறேன். அத்துடன் நடுவர்கள் அவளைப் பார்க்கலாமா என்று கேட்ட போதுகூட அதை பெருமையாகக் கருதி அவளை நடுவர்களின் முன் சமர்ப்பித்த அந்த இளைஞன் முன் வார்த்தை கொண்ட மனிதஇனமே வெட்கித்தலைகுனிக. அவன் யூலியைக் கல்யாணம் செய்யவில்லை என்றாலும் கொடுத்தவார்த்தையை தான் காப்பாற்றுவேன், வார்த்தை என்றால் என்ன என்பதை நிரூபித்துள்ளான். அவன் தன்காதலிக்காக எழுதிய பாடலையும் அவன் வார்த்தைகளையும் திசைமாறி மனிதமுரண்பாடு கொள்ளும் என் மக்களுக்காக இதைத் தருகிறேன். தயவுசெய்து ஒவ்வொரு வார்த்தைகளையும் அவதானமாகக் கவனியுங்கள். வார்த்தைகள் என்றும் வாழ்வன, நாம் இறந்தபின்பு கூடச் சஞ்சரிப்பன. அந்த வார்த்தைகள் கலந்த காற்றையே நாம் சுவாசிக்கிறோம். வார்த்தைகளுக்காக வாழுங்கள்.இதை நான் எமது பண்பாடுகளை வளர்த்துக் கொள்ளும் முகமாகவே இதை பதிவு செய்கிறேன்;. 

கண்கீறிய காயங்கள்



சப்பெனத் திரிவதைவிட
ஒப்பனை தப்பல்ல நக்கீரா
இளமைத் தோற்றங்கொளின்
மனதும் இளமைகொள்ளுமே
பியோனா! உங்கள் கருத்துடன் எந்த மறுப்பும் கிடையாது. ஒப்பனை என்றும் இருக்க வேண்டியது தான். ஏன் கற்பனையின் வடிக்கும் கவிதையில் கூட ஒப்பனைதானே அழகு. ஒப்பனை என்று எண்ணி ஒவ்வாத ஒன்றை ஒப்பனை ஆக்குவதால் உள்ள அழகுமல்லவா சிலவேளைகளில் கெட்டு விடுகிறது. ஒரு பழமொழி சொல்வார்கள் காகம் அன்னநடை நடக்கப்போய் தன்னடையும் கெட்டதாம் என்ற கணக்காகக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் அழகானவர்கள்தான். ஒப்பனை என்பது உள்ள அழகை பெருகேற்றுவதே. அதற்காக முழுமையாக தம்மை மாற்றப்போய் சுயஅழகும் கெட்டு நிற்கும் நிலையூடாக ஐரோப்பிய வாழ்வியலில் சிவற்றைச் சிந்தியிருக்கிறேன். அஞ்சனம் தீட்டுவது என்பது எமது கீழத்தேயநாடுகளில் இருந்து விருத்தியான ஒன்றுதான். நான் ஒற்பனையினூடாக சொல்லும் விடையம் வேறு. என்ஒப்பனைக்குப் பின்னால் வேறு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன: பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.
நன்றியுடன் நோர்வே நக்கீரா
ஒப்பனை கேடு சொல்லி
அப்பனாய் கவிதை ஒன்று
நக்கீரன் தந்துள்ளார்
அளவான ஒப்பனைகள்
அழகான குடும்பத்துக்கு
அதுக்கான சிறு குறிப்பு
அன்போடு பல்லியிவன்
வாசலிலே கோலமிட்டு
வீட்டுக்கு அழகென்றால்
முதுகிலே கோலமிட்டு
ஒப்பனையின் இலக்கணமாம்
இமை காக்க முடியில்லை
இதனாலே கவலையில்லை
கண் மீது கரு வளயம்
கரும் பேனா துணையுடனே
அளவான உடுப்பில்லை
ஆனாலும் அழகென்பார்
பல் கூட துலக்காமல்
அதுக்கும் ஒப்பனையாம்
இங்கேபார் என்பதுபோல்
இடுப்பின் கீழ் சிற்றாடை
இளசுகள் வட்டத்துக்கோ
இதனாலே தடுமாற்றம்
வறுமையின் கோலத்தால்
காதிலே தோடில்லை-அன்று
ஒப்பனையின் வேகத்தால்
நாவிலேயும் தோடுண்டு- இன்று
உள்ளாடை தெரியட்டாம்
உடுப்பு கடை முதலாளி
அது தெரிய உடுக்கட்டாம்
ஒப்பனையின் மேஸ்த்திரிகள்
முடியில்லா முகத்திலே
மீசையுடன் தாடி உண்டு
முடிஉள்ள தலையேனும்
மொட்டைதான் ஒப்பனையாம்
கண்ணுக்கு மை அழகு
ஒப்பனையில் எழுதியது
தொடர்வதனால் அது கேடு
மருத்துவமே சொல்லுகிறது
ஒப்பனையை ரசிப்போம் நாம்
சினிமாவிலும் ராமாவிலும்
வாழ்க்கை என்ன சினிமாவா
ஒப்பனையை வரவேற்க;
நட்புடன் பல்லி;
நக்கீரா பல்லி
கவிதை கேட்டு
குண்டலீனி எழுந்து
அண்டமெல்லாம் அளந்து
அலைந்து விழுந்தது
பிளாக் கோலில்
என்னத்தைச் சொன்னாலும் பல்லி இப்ப நல்லாய் கவிதை எழுதப் பழகிட்டார். வாழ்த்துக்கள் பல்லி.
முடியில்லா முகத்திலே
மீசையுடன் தாடி உண்டு
முடிஉள்ள தலையேனும்
மொட்டைதான் ஒப்பனையாம்
நக்கீரா மிஸ்பண்ணிய ஆண்களின் ஒப்பனையையும் பல்லி கவர் பண்ணீட்டார்.
::// வாழ்த்துக்கள் பல்லி. //
நன்றி கந்தையாண்ணா;
//அலைந்து விழுந்தது
பிளாக் கோலில்:://
அப்புறம்???
பல்லியைக் காணவில்லை என்று கவலைப்பட்டேன். கோடைவிடுமுறையைக் கழிக்க எங்காவது பயணித்து விட்டாரோ என்றெண்ணினேன். நான்விட்டதை பல்லி தொடர்ந்திருக்கிறார்.
பல்லி கலக்கிறார்
கலக்கிறது அடிவயிறு
கன்னிகள் எல்லாம்
கனிகளாகி
கன்னிகழிகிறது
13வயதில்
சீதணம் இன்றி
இதுவும் ஒப்பனையாம்
நாகரீகத்தின் கற்பனையாம்
குழந்தை குழந்தை பெறும்
கோலம்தான் ஒப்பனையாம்
தோடு குத்த இடமின்றி
தொப்பிளிலும் தோப்பையிலும்
கண்காணா இடமெல்லாம்
காட்டவென்றே குத்துகிறார்
குத்திக் குத்தியே
கண்கெட்டுப்போய் பின்
புண்பட்டுப்போனதோ?
அப்புவின் கோவணம்
ஐரோப்பாவில் நாகரீகம்
பணம் பிதுங்கும் நாடுகளில்
உடையின்றி அவலங்கள்
உடைக்குப் பதில்
உடலில் கீறப்படும்
உடையில்லா வரைபடங்கள்.
வரைபடமே உடையாகும்
ஒப்பனை தனையும்
கண்டீரோ?
ஒப்பனை செய்ய
கீறவிடமின்றி
அங்கேயும் கீறுகிறார்கள்
இனி எங்கெங்கு கீறிக் கிளிப்பார்களோ?
என்ன சோதிலிங்கம்! குண்டலீனி எழுந்தால் பிளக்கோலில் விழக்கூடாது. இங்கே விழுபவர்கள் எல்லாம் வேற்று நீர் விழுந்தவர்கள். குண்டலீனி எழுந்தாலும் ஞானம். ஆமாம் பிளக்கோலிலும் ஞானம்தானே… ஞானம் என்பது பால்வெளி மண்டலம். விமானங்கள் தொலையும் பிளக்கோலும் அங்குதான். விமானமா ரொக்கட்டா என்பதை தொழில் நுட்பம்தான் நிர்ணயிக்கும்.
சோதியின் கற்பனை அபரீதம்.
கற்பனை மிக மிக அழகாக இருக்கிறது.
தொடருங்கள்.
கவிதையின்
ஒப்பனையே
கற்பனை தான்
தடிமன் வராதிருக்க
தலையெடுத்த கதைபோல
முடியில்லா மண்டையில்
மொட்டையும் ஒப்பனையே
நன்றி பல்லி
பிற்குறிப்பு: யாக்கை-மெய் என்பது உடல் அல்லது உடம்பு என்பது பொருள். இனி மீண்டும் ஒருதரம் கவிதையைப் படித்துப் பாருங்கள். கவிதையில் புதுவடிவம் தென்படும்
நக்கீரா உன் கவி வேண்டும்
அதுக்காக என் வரி சில;
அழகியல் குறிப்பொன்று
அடிவயிறு கலங்கி நிற்க்க
ஆனாலும் அதுதானாம்
ஆடம்பர அங்கலாய்ப்பு
கழுத்துக்குமேல் மட்டும்
கழுவிவிடுங்க முகமதனை
இதமாய் தலைநனைத்து
ஈரமாய் கட்டி விட்டு
கதிரை ஒன்றை எடுத்து
கண்ணாடி முன் அமர்ந்து
காற்றில்லா அறையில்
கதவையும் தாழிட்டு
வேகவைத்த இட்டலியை
வேகாத றால் சேர்த்து
தேசிக்காய் சாறூற்றி
தேறும்வரை பிசைந்து விட்டு
தேறிய களி எடுத்து
தேயுங்கள் முக திரையில்
உண்மை முகம் மாறும் வரை
உள்ளம் கையால் தேயுங்கள்
கண்ணிமைக்கு பசை பூசி
கட்பண்ணி இழுத்திடுங்கள்
பாவபட்ட இமை அதனை
பலமாயே அமத்திடுங்கள்
உடுக்கும் கலர் கொண்டு
உதட்டைதான் போர்த்திடலாம்
வில்லாய் வளைத்திடலாம்
வீங்கிய கண் மேலே
கட்டிய தலை முடியை
அவிழ்த்து விட்டு சிலிப்பிடுங்கள்
கண்டபடி சிரித்து விட்டு
கதவைதான் திறந்திடலாம்
அழகோ அழகு அப்படி அழகு
இத்தனைக்கும் பல்லிக்கு
ஒரு நன்றி சொன்னாலே போதும்
மறக்க வேண்டாம் நன்றி சொன்னாலே போதும்;
நகைசுவைக்காய் பல்லி;
அழகியல் குறிப்பிற்கு
இழகிய இதயத்தால்
நன்றியோ நன்றி பல்லி
மரத்தில் இருந்து
குதித்த குரங்கு
ஆடை அணிந்தே
நாகரீகம் ஆனது
படுக்கையை விட்டெழுந்து
உடுப்பை மறந்து விட்டு
தடக்கி விளவென்று
மிதுவடி இட்டுக்கொண்டு
இடக்கு மிடக்காய்
போகிறார்கள் பெண்கள்
நாகரீகம் நாறுகிறது.
குளிக்கப்போன பிள்ளை
குறுக்குக்கட்டுடன்
குதிக்கால் அணியுடனும்
குதித்துக் குதித்து
போவது கண்டு
குரங்கு கூடக்
குனிந்து பார்த்தது.
புரிந்துகொண்டது
குரங்கு நாகரீகத்தை.
குண்டூசி குத்த இடமின்றி
வண்டியிலும் குண்டியிலும்
எப்போ தொண்டையில்?
குழந்தைகள் சீ சீ என்பது
சொல்லப் மொழி சீச்சீ
சோறுக்கு சீ
சோச்சீ
பாலுக்கு சீ……?
என்று கேட்கிறார்கள்
திறந்த மனத்துடன்
தேவதைகள் போகும் போது
உடலுக்கு உடைபோய்
உடைக்கு உடலானது
உலகம்
காசிருந்தும்
காய்கிறது வயிறு
சிலிக்கோனில்
பாலில்லை என்று
அலறுகிறான் பாலகன்
அம்மா யாருக்கே
கடன் கொடுத்து விட்டாளாம்
அப்பா சொல்கிறார்
எந்த துச்சாதனம்
ஐரோப்பிய அவையில்
துயில் கலைந்தான்.
துரொபதியாகத்
திரிகிறார்களே
தெருக்களெங்கும்
தேவதைகளின் தேக(ச)ம்.
தேவதைகள் அல்ல
தேவ வதை வதை தேவதை
தேவதைகளே
தேகத்தைத் தையுங்கள்
தேசியம் தெரியும்:
உங்கள் தேகம் போல்
கிடக்கிறது எம்தேசியம்.
தேசியம் அல்ல இது
தேச அவம்
இதுவும் நகைச்சுவைக்காகவே
//உடலுக்கு உடைபோய்
உடைக்கு உடலானது
உலகம்
காசிருந்தும்
காய்கிறது வயிறு
சிலிக்கோனில்
பாலில்லை என்று
அலறுகிறான் பாலகன்
அம்மா யாருக்கே
கடன் கொடுத்து விட்டாளாம்
அப்பா சொல்கிறார்//
இலக்கியத்தில் சொல் எடுத்து
இலக்கணமாய் அதை தொடுத்து
கம்பனிடம் கடன் வாங்கி
கவிதை பல உண்டுதான்
ஆனாலும் அவை தாண்டி
நக்கீரா உன் யதார்த்த கவி
பல்லியையும் எழுத வைக்கும்;
பல்லி மனம்திறந்து சொல்கிறேன். உங்களது கவிதைகள் அருமை. சொற்களை அழகாக அடுக்குகிறீர்கள். தேசத்தில் ஒரு பரீட்சாத்தமாகதான் கவிதை போடப்பட்டது. பின்புதான் புரியவந்தது. பல்லியைப்போல் பலர்கவித்துவத்துடன் எத்தனைபேர் ஒழிந்திருக்கிறார்கள் என்று. அசிங்கங்களைக் கூட அழகாகத் தரக்கூடியது கவிதை.
கவியின் விதையே
கவிதை
கவிதாவி கடுதாசியில்
விழுந்தாலும் கவிதை
கருவின் விதையல்லவோ
கவிதை
இது என்கவிதைக்கான கவிவரைறை. நான் பல்லிக்கவிதையின் இரசிகன். தொடர்ந்து எழுதுங்கள்.